Sunday, October 10, 2010

வடக்கு சிக்கிம்.North Sikkim



டக்கு சிக்கிமில் நாங்கள் சில இராணுவ நிலைகளைக் காண்பதற்காக
அழைத்துச்செல்லப்பட்டோம். தரையில் உள்ள சொர்க்கம் சிக்கிம்
என்றார்கள். உண்மைதான்.



ஆனால்
அதன் வழி நரகமாகவே பட்டது. இடுப்பை ஒடித்துவிடும் வகையில் சாலைகள். பாறைகளைபோட்டு சாலைகளை ஏற்படுத்தி இருந்தார்கள். மழைக்காலம் என்பதால் ஆங்காங்கே நிலச்சரிவு.சாலைகளைச் செப்பனிடும் பணியில் எல்லைப்புற சாலைகள் நிறுவனத்தின் (BRO) ஊழியர்கள்.

பி.ஆர்.ஓ. நிறுவனம் இல்லையென்றால் சிக்கிம் இல்லை. ஏன் வடகிழக்கும் காஷ்மீரும் இல்லை என்பதை ஆணித்தரமாக உணர்த்தியது இந்த இடம். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த புகைப்படக்கட்டுரை.

மாலையில் சாலைகளை ஏற்படு்த்திவிட்டு மறுநாள் காலையில் வந்து பார்த்தால் இரவில் ஏற்பட்ட நிலச்சரிவில், முன்தினம் சாலை அமைத்ததற்கான எந்த அறிகுறியும் இல்லாது அழிந்துபோயிருக்கும். மீண்டும் மலையை வெட்டி சாலை அமைக்க வேண்டும். ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்திற்கு சாலை இணைப்பு இல்லாமல் பல நாட்கள் துண்டிக்கப்பட்ட சம்பவங்கள் அங்கு யாருக்கும் வியப்பினை ஏற்படுத்தாத வாக்கியங்கள்.


No comments:

Post a Comment