இந்த சம்பவம் நடைபெற்று 8 வருடங்கள் ஆகிறது. ஆனால் நினைவிலோ இன்னும் பசுமையாக.
நாடாளுமன்றத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய டிசம்பர் 13ந்தேதி. நான் அப்போது ஒரு அமைச்சரிடம் பணிபுரிந்தேன். அமைச்சர் நாடாளுமன்றத்தில் இருந்து காலை 11 மணியளவில் அலுவலகத்திற்கு கிளம்பிய சிறிது நேரத்தில் தாக்குதல் நடந்திருந்தது. அலுவலகத்தில் எல்லோரும் அவரவர்களுக்கு தெரிந்தவர்களுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினர். அலுவலகத்தில் உள்ள நண்பர் தமிழரசன் தானும் தன் மனைவியிடம் இந்த சம்பவத்தை தெரிவிக்கலாம் என்று கருதி போன் செய்தார்.
மனைவியிடம் மிகவும் துடிப்பூட்டி சம்பவத்தை விளக்கினார்.
இரண்டு நிமிடம் அவர் பேசிவிட்டு போனை வைத்தார். என்னிடம் வந்தார். சிதம்பரம், வீட்டுக்காரிகிட்ட போன் போட்டு விஷயத்தை சொன்னா, “ஏங்க பிள்ளை ஆய் போய்ட்டு இருக்கு அப்புறம் போன்பண்ணி சொல்லங்களேன்னு சொல்லி வச்சிட்டா” என்றார். அலுவலகத்தில் இருந்த அனைவரும் சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிப்போன விஷயம் இது.
என்ன இருந்தாலும் பெண்களுக்கு அவர்கள் வேலைதான் முக்கியம்!!!
3 comments:
இதே குழந்தை ஒரு ஆண்கையிலிருந்து ஆய் போய்கிட்டு இருந்தா ஆண் போனை கூட அட்டெண்ட் பண்ணியிருக்க மாட்டார்
ஹாஹாஹா. உண்மைதான்.
இதே குழந்தை ஒரு ஆண்கையிலிருந்து ஆய் போய்கிட்டு இருந்தா ஆண் போனை கூட அட்டெண்ட் பண்ணியிருக்க மாட்டார்//
+1
Post a Comment