அங்கு சுற்றுப்பயணம் செய்த போது எனக்கு அதிர்ச்சி தான் ஏற்பட்டது. குவஹாத்தி நகரைத் தவிர அசாமில் வேறு எங்கும் வளர்ச்சி ஏற்படவே இல்லை. எங்களுடன் வந்திருந்த நண்பர் ஒருவரை சந்திக்க அசாமில் உள்ள பத்திரிகையாளர் ஒருவர் வந்திருந்தார். அவர் கூறிய தகவல் அதிர்ச்சி அளிப்பதாகவே இருந்தது.
வட கிழக்கு மாநிலங்களில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. அங்கு கிளர்ச்சி என்பது பணம் காய்க்கும் மரமாகவே உள்ளதாக அந்த நபர் கூறினார். சமீபத்தில் ஒரு RTI கேள்வி மூலம் கிடைத்த பதில், குறிப்பிட்ட மாநிலத்தில் 4 சுங்கச்சாவடி அரசு சார்பாக இருப்பதாக. ஆனால் உண்மையில் சுங்கச்சாவடி இயங்குவது 12 இடங்களில். ஒரு லாரிக்கு 600 ரூபாய் சுங்க வரி என்றால் (போலி வரி) எவ்வளவு வசூலாகும் என்று நம்மையே கணக்கு பார்த்துக்கொள்ள நண்பர் சொன்னார்.
அரசு திட்டப்பணிகளை தணிக்கை செய்ய வரும் அதிகாரிகளுக்கு அவர்கள் எதிர்பார்ப்பதற்கு மேலாக சப்ளை செய்யப்படுவதால், தணிக்கை எதுவும் நடைபெறுவதில்லையாம். சமீபத்தில் அரசியல் தலைவர் ஒருவர் கார் ஷெட்டில் இருந்து 16 கோடி ரூபாயை சி.பி.ஐ. கைப்பற்றியதாம். அவ்வளவு பணம் எங்கிருந்து அவருக்கு வந்தது என்பது யாருக்கும் தெரியவில்லை.
இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் நாம் தொடர்ந்து வரி செலுத்திக்கொண்டு இருக்கிறோம்.
1 comment:
இன்று நாடு இருக்கும் நெலமையில்...
நெறைய துறைகளுக்கு சம்பள பட்டுவாடா செய்து அரசு ஊழியர்களை வீட்டில் உக்கார வைத்தாலே ... நம்ப நாடு உருப்படும் ...
வேணாம் இதோடுவிடுகிறேன்
Post a Comment