Monday, September 20, 2010

எனது வடகிழக்கு மாநில பயணம்



அலுவலக பயிற்சி தொடர்பாக விசாகப்பட்டினம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. சுமார் ஒரு மாதத்திற்கும் மேல் குடும்பத்தை விட்டு பிரிந்து இந்த பயணத்தை மேற்கொண்டபோது பல்வேறு அனுபவங்கள் கிடைத்தன. இதில் வடகிழக்கு மாநிலங்களின் அவலங்கள் என்னை மிகவும் பாதித்ததால் வலைப்பூவில் பதியும் எண்ணம் தோன்றியது.


நமது பட்ஜெட்டில் 45 சதவீத பணத்
தை வடகிழக்கு மாநிலங்களுக்கும் காஷ்மீருக்கும் வழங்குகிறோம். ஆனால் இந்த பணத்தில் ஒரு சதவீதம் கூட இப்பகுதி மக்களைச் சென்றடையவில்லை
என்பதை கண்கூடாக காண நேர்ந்தது. அசாமில் குவஹாத்தி நகரில் சற்று செழுமையைக்காண முடிந்தது. கச்சார் மாவட்டம் சில்ச்சார் நகரில் இருந்து மிசோரம் மாநிலத்தின் எல்லையில் உள்ள வைரங்டே என்ற இடத்திற்கு செல்ல எங்களுக்கு 4 மணி நேரம் பிடித்தது. காரணம் சாலை. இந்த இடத்தின் தூரம் 55 கி.மீ. மட்டும்தான். வழியெங்கும் உள்ள கிரா
மங்கள் அடிப்படை வசதிகள் இன்றி தவிப்பதைக்காண முடிந்தது. இதைப்பற்றிய என் கருத்துக்களை வரும் நாட்களில் நான் பதிகின்றேன்.
அலுவலகப்பயிற்சியின் விதிமுறை காரணமாகவும், நாட்டின் பாதுகாப்பு காரணமாகவும் சில இடங்களின் பெயர்களை வெளியிடுவதில்லை என்ற உறுதிமொழி ஏற்றுள்ளதால், சில
இடங்களைப்பற்றி பொதுவாக குறிப்பிட நேரிடும். அதற்காக பொறுத்துக்கொள்ளவும்.அசாமைப் பொருத்தவரையில் எங்கு பார்தாலும் தண்ணீர் தான். பிரம்மபுத்திரா நதி பரந்து விரிந்து ஓடுகிறது. அதன் கிளை நதிகள் எல்லா இடங்களிலும் உள்ளன. வட கிழக்கு மாநிலங்களில் நவீன விவசாய உத்தியை பயன்படுத்தினால், நம் நாட்டின் உணவு உற்பத்தி பல மடங்கு பெருகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

No comments:

Post a Comment