என் நண்பன் சென்னை ஐ.ஐ.டி.யில் பேராசியராக பணியாற்றுகிறான். (பள்ளி நண்பன் படிக்கும் போது இவ்வளவு பெரிய இடத்திற்கு வந்து சேருவான் என்று தெரியாமல் பழகியதால் ஒருமையில் அழைக்கத்தொடங்கிவிட்டோம். பாதுகாப்பு அமைச்சரின் டி.ஆர்.டி.ஓ. விருதைப் பெற டில்லிக்கு வந்தான். வந்த இடத்தில் தொலைபேசியில் அழைத்தான். அவனும் அவன் மனைவியையும் வீட்டிற்கு அழைத்துவந்து பேசியபோது அவன் பேசிய பல விஷயங்கள் பிரமிக்க வைத்தன.
முனைவர் பட்டம் பெறுவதற்காக அமெரிக்கா சென்ற போது பெரியவர்களாகப்பார்த்து மணமுடித்து வைத்தார்கள். அமெரிக்க மாப்பிள்ளை என்ற கனவில் அவன் மனைவி அமெரிக்காவிற்கு சென்ற போது, அங்கிருந்து விரைவிலேயே இந்தியாவிற்கு அழைத்து வந்துவிட்டான். கேட்டதற்கு நாம் படித்த படிப்பு நம் நாட்டிற்கு பயன்பட வேண்டும் என்ற எண்ணம் தான் என்றான்.
அவனது ஆராய்ச்சியின் வெற்றியை முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் கூட பாராட்டி இருந்தார். அவன் வேலைக்கு வருவதாக கூறினால் அமெரிக்காவின் நாசா சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்கும். ஆனால் சென்னை ஐ.ஐ.டி. யில் பேராசிரியராக வருடத்திற்கு 6 லட்சம் ரூபாய் வேலைக்கு செல்கிறான்.
வெளியில் அதைவிட பல மடங்கு அதிகம் சம்பளம் கிடைக்கும்.
ஆனால் போகவில்லை. கேட்டால் சொல்கிறான். ”பணம் மட்டும் தான் வாழ்க்கை யில்லை.
நாட்டிற்காக செய்ய வேண்டியது எவ்வளவோ இருக்கிறது.”
வாழ்க தேசபக்தி.
1 comment:
Very Patriotic! :)
Post a Comment