Sunday, February 21, 2010

எட்டாம் வகுப்பு பாஸ்

அலுவலக பணி காரணமாக தட்டச்சு செய்யும் தனியார் நிறுவனத்திற்கு செல்வதுண்டு. அங்கு எடுபிடி வேலை செய்யும் இளைஞன் நல்ல துரு துரு என்று இருப்பான். அவனுடைய இந்தி கையெழுத்து அற்புதமாக இருக்கும். எப்படியாவது அரசு வேலையில் சேர்ந்துவிட வேண்டும் என்று துடியாய் துடித்து வந்தான். எந்த ஒரு துறையிலும் கடைநிலை ஊழியர் பணிக்கு எந்த விளம்பரம் வந்தாலும் அதை எடுத்து வருவான். நான் அவன் சான்றிதழ்களின் படிகளை அசல் தான் என்று சான்றொப்பம் இட்டுத் தருவேன்.
ஒருமுறை அரசு அச்சகத்தில் ஒரு பணிக்கான விண்ணப்பத்தை எழுதி அதை கொண்டு வந்தான். அதில் கல்வித்தகுதி என்ற கேள்விக்கு 8வது பாஸ் என்று குறிப்பிட்டு இருந்தான். நான் அவனை நீ 8ம் வகுப்பு வரை தான் படித்திருக்கிறாயா என்று கேட்டேன். அதற்கு அவன், இல்லை சாப். நான் 10ம் வகுப்பு பாஸ் செய்துள்ளேன் என்றான். பின்னர் ஏன் 10ம் வகுப்பு பாஸ் என்று எழுதவில்லை என்று கேட்டேன். அதற்கு அவன், விண்ணப்பப்படிவத்தில் 8ம் வகுப்பு பாஸ் ஆகியிருக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். ஆகவே நான் 8ம் வகுப்பு பாஸ் ஆகிவிட்டேன் என்பதை குறிப்பிட்டுள்ளேன் என்றான். அவனுக்கு புரிய வைப்பதற்குள் எனக்கு போதும் போதும் என்றாகி விட்டது.
அந்த இளைஞனின் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தான் இன்று இந்திய ரெயில்வேயில் அதிகமானோர் உள்ளனர். எல்லாம் 12 வருடங்களுக்கு மேல் அந்த மாநிலத்தை சேர்ந்த 3 பேர் ரெயில்வே மந்திரிகளாக இருந்தது தான்.

No comments:

Post a Comment