Friday, January 29, 2010

வாழ்த்துக்களா? வாழ்த்துகளா?

நண்பர் ஒருவர் எழுதிய மடலில் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று அனைவரையும் வாழ்த்தியிருந்தார். அதைப்படித்த மற்றொரு நண்பர், பள்ளிக்கூடத்தில் தமிழாசிரியை கூறியதாக (எனக்கு நினைவில்லை) வாழ்த்துகள் தான் வாழ்த்துக்கள் இல்லை என்று கூறி பரிகாசம் செய்தார்.
எனக்கு வாழ்த்துக்கள் தான் சரியென்று படுகிறது. இருப்பினும் அந்த நண்பரிடம் மூக்கு அறுபடாமல் இருக்க அவரிடம் விவாதம் செய்யவில்லை. இணையத்தில் கேட்ட நண்பர்களிடையே இருவிதக்கருத்துக்கள்.
எது தான் சரியான சொல்?. யாராவது விளக்குங்களேன்.
சிதம்பரநாதன்.

No comments:

Post a Comment